• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்தல்
- உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கும் விசேடமாக ஆசிய வலய உறவுகளை மேம்படுத்தும் பொருட்டும் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வது ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியானது தாபிக்கப்படுவதற்கான அடிப்படை நோக்கமாகும். இலங்கை இந்த வங்கி தாபிக்கப்படுவது சம்பந்தமான உடன்பாட்டு உடன்படிக்கையில் ஆரம்ப உறுப்பினர் ஒருவராக 2015 யூன் மாதம் 29 ஆம் திகதியன்று சீனாவின் பீஜிங் நகரத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதுவரை ஆசிய வலயத்திலுள்ள 37 நாடுகளும் வலயத்தில் இல்லாத 20 நாடுகளும் மொத்தமாக 57 நாடுகள் இந்த வங்கிக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு உடன்பட்டுள்ளன. வங்கியின் அனுமதித்த மூலதனம் 100 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இதில் 75 சதவீதம் வலய நாடுகளிலிருந்தும் எஞ்சிய 25 சதவீதம் வலயத்தில் இல்லாத நாடுகளிலிருந்தும் பங்களிப்புச் செய்யப்படவுள்ளது. ஆரம்ப உறுப்பு நாடுகளினால் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அந்த நாட்டின் பொருளாதார (மொத்த தேறிய தேசிய உற்பத்தி) அளவுகள் மீது பங்குகள் ஒதுக்கப்படும் இதற்கமைவாக ஒதுக்கப்பட்ட இலங்கையின் பங்குகளுக்கான பங்களிப்புத் தொகையானது 268 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பினை அடிப்படையாகக் கொண்டு மேற்போந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்து ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் உறுப்பினர் ஒருவராவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் சட்டமூலமொன்றை வரைவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று இந்த வங்கியின் பணிப்பாளர் சபையில் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வலயமொன்றுக்குச் சொந்தமான நாடொன்றுடன் இணைய வேண்டுமென்பதனால் இந்த நோக்கத்திற்காக இந்தோனேஷியா தலைமைதாங்கும் "ஜீ" குழுவுடன் இணையும் பொருட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.