• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேசிய வாரத்தை செயற்படுத்துதல்
8. - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது 25 சதவீதத்திற்கும் குறைவான அளவினர்கள் எனவும் உயர் கல்வியைத் தொடரும் போது 8 சதவீத்தினையும் விட குறைந்த மட்டத்தில் உள்ளதெனவும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவும் பிழையான உணவு பழக்கவழக்கங்கள், மதுசாரம் மற்றும் புகைத்தல் போன்ற காரணங்களின் மீதும் தொற்றாத நோய்களுக்கு ஆளாகும் நூற்றுவீதமானது அதிகரித்துள்ளதோடு, 65 வயதிற்கு குறைந்தவர்களின் மரணத்தில் 68 சதவீதம் தொற்றாத நோயினால் நிகழுகின்றமை தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, முழுமொத்த சமூகத்துக்கும் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இயைபுள்ள அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றுடன் இணைந்து பின்வருமாறு "விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுக்கான தேசியவாரம்" என்பதை 2016 சனவரி 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சனவரி 25 திங்கட்கிழமை -
அரசதுறையின் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுத் தினம்

* சனவரி 26 செவ்வாய்க்கிழமை -
கல்வி, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள், இளைஞர் மற்றும் மகளிர் அலுவல்கள் போன்ற துறைகளின் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுத் தினம்

* சனவரி 27 புதன்கிழமை -
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறைகளின் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுத் தினம்

* சனவரி 28 வியாழக்கிழமை -
பாதுகாப்பு சேவை மற்றும் தனியார் தொழில்முயற்சி துறைகளின் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுத் தினம்.

* சனவரி 29 வௌ்ளிக்கிழமை -
விளையாட்டுத்துறை அமைப்புகள், விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் ஆகியவற்றின் விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுத் தினம்.

* சனவரி 30 சனிக்கிழமை -
விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டு விசேட தினம்.