• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்குமிடையில் தண்டனை வழங்கப்பட்ட ஆட்களை கைமாற்றுவது தொடர்பிலான உடன்படிக்கை
- தண்டனைகள் விதிக்கப்படும் ஆட்களை கைமாற்றிக் கொள்ளும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தினதும் ஈரான் இஸ்லாமிய குடியரசினதும் பிரதிநிதிகளுக்கிடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் 2015 திசெம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது. இதற்கமைவாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் நீதி அமைச்சரானவர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கும் இதற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.