• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆபிரிக்க - ஆசிய கிராமிய அபிவிருத்தி அமைப்பின் பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல்
- 1962 ஆம் ஆண்டில் தாபித்துக் கொள்ளப்பட்ட ஆபிரிக்க - ஆசிய கிராமிய அபிவிருத்தி அமைப்பின் பிரதான நோக்கமாவது நிலைபேறுடைய கம்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்திக்கான வாய்ப்புகளையும் கூட்டு முயற்சிகளையும் கண்டறிதலும் பிரச்சினைகள் சம்பந்தமாக உறுப்பு நாடுகளுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வினை உருவாக்குதலுமாகும். இலங்கை 2013 ஆம் ஆண்டில் இந்த அமைப்பிலே நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. இந்த அமைப்பின் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ளமையினால், இலங்கைக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய நலன்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த அமைப்புக்குச் செலுத்தப்பட வேண்டிய வருடாந்த பங்களிப்புத் தொகையை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.