• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப ரீதியான தீர்மானங்களை எடுக்கும் போது தரமதிப்பீட்டினை கட்டாயமாக்குதல்
- மருத்துவ இரசாயன கூடங்கள், தரச்சான்றிதழ் சபைகள், பரிசோதனைச் சபைகள் அடங்கலாக ஆய்வுகூடங்கள் சேவை பெறுவோருக்கு உரிய தரத்திலான சேவைகள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்து வதற்காக இந்த நிறுவனங்களுக்கு இலங்கை ஏற்றங்கீகாரச்சபை சருவதேச மற்றும் தேசிய தரங்களுக்கு அமைவாக ஏற்றங்கீகாரத்தினை வழங்குகின்றது. இந்த சபை தாபிக்கப்பட்டு சுமார் பத்து (10) வருடங்கள் கடந்திருந்த போதிலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள ஏற்றங்கீகாரங்களின் எண்ணிக்கை அண்ணளவாக 100 ஆகும். இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. ஏற்றங்கீகார சபையினால் செய்யப்படும் ஏற்றங்கீகார சேவை பெறுவோர்களின் விருப்பத்தின் மீது மாத்திரம் செய்ய வேண்டியுள்ளமையினால் ஆகும். அதேபோன்று ஏற்றங்கீகாரங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உரிய ஒழுங்குறுத்துகை நிறுவனங்களினால் கிடைக்கும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாமையும் இதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இதற்கமைவாக, நுகர்வோரின் பாதுகாப்புக்கு பாதிப்பினை விளைவிக்கும் தரம், சுற்றாடல், உணவுபாதுகாப்பு, தொழில் மற்றும் தொழினுட்ப பதவியணியின் சுகாதார பாதுகாப்பு, வலுசக்தி போன்ற விடயங்களுக்கு ஒத்திசைவு மதிப்பீட்டு நடவடிக்கைமுறையையும் ஏற்றங்கீகாரத்தையும் கட்டாயப்படுத்து வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.