• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டுக்காக கதிர்காமம் சுற்றுலா விடுதி நிருமாணிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் சார்பில் 141 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் சுற்றுலா விடுதியொன்றை கதிர்காமப் பிரதேசத்தில் நிருமாணிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.