• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குதலும் நிரு மாணிப்பு ஒப்பந்தங்களை வழங்குதலும்
- மேல் மாகாணத்தினுள் இரண்டாம் நிலை நகரங்களுக்கு அண்மையில் முறையற்ற அபிவிருத்திகளினால் உருவாகியுள்ள போக்குவரத்து நெரிசல், வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்மை, வீதி பாதுகாப்பு, சுகாதார பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் ஓய்வாகவும் இருப்பதனற்கான இடங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் "சுக்கித்த புரவர" நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டில் 6 பில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு தொகையில் மேல் மாகாணத்தில் உள்ள கேந்திர முக்கியத்துவமான நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட துரிதமாக மேற்கொள்ள முடியுமான கருத்திட்டங்களை வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் போட்டி கேள்வி முறையை பின்பற்றி நிருமாணத்துறையில் ஈடுபட்டுள்ள அரசாங்க மற்றும் அரசாங்க துறை நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கும் காணி சுவீகரித்தலின் பின் ஆரம்பிக்கத்தக்க நீண்டகால செயற்பாடுகள் ஏற்புடையதாகும் கருத்திட்டங்கள் திறந்த போட்டிக் கொள்வனவு வழிமுறையைப் பின்பற்றி தனிப்பட்ட ஆலோசகர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் வழங்குவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.