• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Meropenem தடுப்பூசி 500 மில்லிகிராம் புட்டிகள் 150,000ம் Meropenem தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் 310,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
- Meropenem தடுப்பூசி ஒவ்வாமைக்காக பயன்படுத்தப்படும் நோய் தொற்று எதிர்ப்பு மருந்தாகும் என்பதோடு, இந்த தடுப்பூசி கொள்வனவு செய்யும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக Meropenem தடுப்பூசி 500 மில்லிகிராம் புட்டிகள் 150,000ம் Meropenem தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் 310,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.