• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாளத்தின் ஊடாக செலுத்தும் Immunoglobulin 5-6 கிராம் புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
- எதிர்ப்புச் சக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நாளத்தின் ஊடாக செலுத்துவதற்காக Immunoglobulin பயன்படுத்தப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக நாளத்தின் ஊடாக செலுத்தும் Immunoglobulin 5-6 கிராம் புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலை முன்வைப்பாளருக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.