• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை நகர மத்தி அபிருத்திக் கருத்திட்டம் - பிரேரிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியினை களுத்துறையில் நிருமாணித்தல்
- களுத்துறை நகர மத்தி அபிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 140 கடைகளையும் 39 அலுவலக அறைகளையும் கொண்ட வசுத்தரிப்பு மற்றும் புகையிரத நிலையத்தையும் இணைத்து வர்த்தக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 200 மில்லியன் ரூபாவாகும். இந்த நிருமாணிப்பு பணிகளை இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.