• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களினால் அதன் சேவைகளை வழங்கும் போது அடிப்படையாகக் கொள்ளப்படும் பூகோள எல்லைகளில் நிலவும் பொருத்தமற்ற தன்மையை மறுசீரமைத்தல்
- இலங்கையின் தற்போதைய பிராந்திய நிருவாக கட்டமைப்பின் சிறிய அலகாவது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகும். நடைமுறையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளதோடு, பொது சிவில் நிருவாக நடவடிக்கைகளுக்காக இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 331 பிரதேச செயலகங்களையும் 25 மாவட்டங்களையும் இணைக்கும் விதத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், பல்வேறுபட்ட சேவைகளை வழங்கும் அரசாங்க நிறுவனங்கள் பலவற்றினால் தற்போது நடைமுறையிலுள்ள நிருவாக எல்லைகளிலிருந்து விலகி தங்களுடைய நிறுவனங்களின் தேவைகளையும் வசதிகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தங்களுடைய பிராந்திய அலகுகளைத் தாபித்துக் கொண்டுள்ளமையினால் பொதுமக்களுக்கும் இந்த நிறுவனங்களின் சேவைகளை எதிர்பார்க்கும் பிற தரப்புகளுக்கும் இன்னல்களுக்கு வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது. உதாரணமாக பூகோள எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு 160 வாக்கெடுப்பு பிரதேசங்களும் 336 உள்ளூராட்சி நிறுவனங்களும் 340 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளும் 311 கல்வி வலயங்களுமாக தற்போது நாட்டில் இயங்குவதனை எடுத்துக் காட்டலாம். இதன் மூலம் பல்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களினால் வகுத்துக் கொண்டுள்ள பிராந்திய அலகுகள் காரணமாக தற்போது நிலவும் பொருத்தமற்றத் தன்மை, கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பூகோள எல்லைகளை நிர்ணயித்தலை நீக்கும் பொருட்டு சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.