• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச மற்றும் பகுதி அரச நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணிப்பதற்கும் பேணுவதற்குமான வழிகாட்டல்களை அறிமுகம் செய்தல்
- நடைமுறையிலுள்ள அபிவிருத்தி செயற்பாட்டினுள் பெருமளவில் கட்டடங்கள் நிருமாணிக்கப்பட்டு வருகின்றதோடு, அவை சுற்றாடல் நட்புறவு மிக்கதாக நிருமாணித்தல் அத்தியாவசியமானதாகும். அதற்காக கட்டடங்களினுள் சுகாதாரம் மிக்க சூழலை உருவாக்குவதோடு, வலுசக்தி, நீர் மற்றும் ஏனைய பயன்பாடுகளின் பாவனையை குறைப்பதற்காக "பசுமை கட்டடங்கள்" (Green Buildings) எண்ணக்கரு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வளி மாசடைதலை குறைத்து உள் மற்றும் வெளி வாயு நிலைமைகளை மேம்படுத்தி சுகாதார ரீதியிலானதும் சிறந்ததும் ஆரோக்கியம் மிக்கதுமான சுற்றாடலை உருவாக்கிக் கொள்ளலாம். சுற்றாடல் நட்புறவுமிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இலங்கையில் அபிவிருத்தி செயற்பாட்டிற்குள் சுற்றாடலை ஆரோக்கியம் மிக்கதாகவும் நிருமாணிப்பு தொழில் ஊடாக சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதுவும் இதன் மூலம் செய்து கொள்ளப்படல் வேண்டும். இந்தக் குறியிலக்கை அடைவதற்காக 2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்கதாக நிருமாணிக்கும் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக அரச மற்றும் பகுதி அரச நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க "பசுமை கட்டடங்கள்" ஆக நிருமாணிப்பதற்கும் நடாத்திச் செல்வதற்குமாக தற்போது வரையப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை புலனாய்வு செய்யும் பொருட்டும் இதற்குரிய செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குமாக உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.