• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படும் இடர் விளைவிக்கக்கூடிய கழிவுபொருட்கள் மற்றும் இரசாயனங்களை முகாமிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கையில் இடர் விளைவிக்கக்கூடிய கழிவுபொருட்கள் மற்றும் இரசாயனங்களை முகாமித்து சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் இடர் விளைவிக்கக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்குடன், நிதி மற்றும் நிறுவன ரீதியிலான வினைத்திறனை அடைந்து பின்வரும் 04 கருத்திட்டங்களை இணைத்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிகழ்ச்சித்திட்டமொன்றாக 2016-2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் கருத்திட்டப் பணிகளை கையாளுவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் இயைபுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கருத்திட்ட வழிநடத்தல் குழுவொன்றை தாபிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* இலங்கையில் polychlorinated diphenyl கழிவுப் பொருட்களையும் இந்த இரசாயனம் அடங்கிய உபகரணங்களையும் சுற்றாடல் நட்புறவு மிக்கதாக முகாமிக்கும் அகற்றும் கருத்திட்டம்.

* பாதரசம் பற்றிய மினமாட்டா சமவாயத்துக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கான பின்னணியை கட்டியெழுப்புதல் மற்றும் சமவாயத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் பற்றிய கருத்திட்டம்.

* polychlorinated diphenyl ethers முகாமைத்துவம் மற்றும் குறைப்பதற்கான துணைவலைய செயற்பாட்டுத் திட்டத்திற்கான கருத்திட்டம்.

* இலங்கையில் ஈய அமில மின்கலங்களை சுற்றாடல் நட்புறவு மிக்கதாக உற்பத்தி செய்தலும் அதன் மீள் சுழற்சி தொடர்பிலுமான கருத்திட்டம்.