• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிரிந்திஓயா பிரதான நீர்ப்பாசன திட்டத்தின் வதிவிடக் கருத்திட்ட முகாமையாளரின் அலுவலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- கிரிந்திஓயா பிரதான நீர்ப்பாசன திட்டத்தின் வதிவிடக் கருத்திட்ட முகாமையாளரின் அலுவலகம் அமைந்துள்ள காணி லுணுகம்வெஹர பஸ் தரிப்பிட நிருமாணிப்புக்காக உடைமையாக்கிக் கொள்ளப்பட்டதன் விளைவாக இந்த அலுவலகம் குறித்த பிரதேசத்தில் பிறிதோர் இடத்தில் தாபிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 80 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்றை இந்த அலுவலகத்தில் நிருமாணிப்பதற்கும் இதற்குரிய நிருமாணிப்பு ஒப்பந்தத்தை வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழுள்ள அரசாங்க பொறிறியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்குமாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.