• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன உதவியின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை தரமுயர்த்துதல்
- முன்னுரிமையின் மீதும் துரிதமாகவும் தேவைப்படும் உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லாத ஏனைய உபகரணங்கள், பிற பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை இலங்கையின் சகல மாகாணங்களிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்குவதன் மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார சேவைகளின் நியாயமான வழியை உறுதி செய்வதற்கும் மேற்போந்த கருத்திட்டத்தின் கீழ் வாய்ப்பு கிடைக்கும். இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இனக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.