• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை விடுவித்தல்
- நல்லிணக்கம் மற்றும் நீண்டகால சமாதானத்தை கட்டியெழுப்பும் போது மோதல் நிலைமை காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களுடைய பூர்வீக கிராமங்களில் மீள குடியமர்த்துவது மிக முக்கியமானதாகும். இது கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் மூலமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய காணிகள் மீளக் குடியமர்வதற்காக விடுவிக்கப்படாததன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கணிசமான குடும்பங்கள் இதுவரை நலன்புரி நிலையங்களிலோ அல்லது அவர்களுடைய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வசிக்கின்றனர். இதற்கமைவாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மேற்போந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள காணிகளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு விதிமுறையாக விடுவிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.