• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வியாபார வசதிப்படுத்தல்
- கப்பல் வர்த்தக மையநிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து கொள்ளும் போது சுங்க மற்றும் சருவதேச வர்த்தகத்திற்குரிய ஏனைய செயற்பாடுகளை முறையாக பேணுவது மிக முக்கியமானதாகும். பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு உரியதான சுங்க இசைவாக்கம் மற்றும் நாடுகளின் எல்லைகளில் பின்பற்றப்படும் நடவடிக்கை முறைகளை மேலும் இலகுவாக்கும் அத்துடன் விரைவுபடுத்தும் நோக்கில் உத்தேச வியாபார வசதிபடுத்தல் உடன்படிக்கையின் இறுதி வரைவு 2013 ஆம் ஆண்டின் திசெம்பர் மாதத்தில் இந்தோனேஷியாவில் நடாத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் 09 ஆம் அமைச்சர்கள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை உலக வர்த்தக அமைப்பு தாபிக்கப்பட்டுள்ள Marrakesh உடன்படிக்கையில் சேர்க்கும் பொருட்டு இந்த அமைப்பின் உறுப்பினர்களினால் 2014 நவம்பர் மாதத்தில் திருத்தியமைக்கப்பட்ட சமவாயம் அங்கீகரிக்கப்பட்டதோடு, இந்த உடன்படிக்கை உறுப்பு நாடுகளினால் செயல்வலுவாக்கம் செய்யப்படுதல் வேண்டும். இதற்கமைவாக இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.