• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 சத வீதமான கொடுப்பனவுகளைச் செய்யும் கருத்திட்டத்தின் முன்னேற்றம்
- 2012 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக வீடமைப்பு பணிகளுக்காகவும் மருத்துவ வசதிகளுக்காகவும் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து முன்னதாகவே 30 சதவீதமான நலன்களை விடுவித்தலானது 2015 ஆம் ஆண்டின் நடுக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு நலன்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இதுவரை 70,269 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதெனவும் இவற்றிலிருந்து 7,537 விண்ணப்பங்கள் சார்பில் 5.5 பில்லியன் ரூபா இற்றைவரை விடுவிக்கப்பட்டுள்ளதெனவும் மீதி விண்ணப்பங்களுக்கு தாமதமின்றி நலன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதெனவும் எதிர்காலத்தில் இந்த செயற்பாட்டினை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளதெனவும். தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.