• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யுத்த வீரர்களுக்கான "விருசர வரப்பிரசாத" அட்டையினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
- நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு இலங்கையின் இறைமையை பாதுகாத்தமை சார்பிலும் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் உயிர்நீத்த, காணாமற்போன அத்துடன் அங்கவீனமுற்ற முப்படைகளினதும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் படை வீரர்களுக்கும் அவர்களில் தங்கி வாழ்வோருக்கும் நலன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் "விருசர" என்னும் பெயரில் சிறப்புரிமை அட்டையொன்றை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போதும் சுகாதாரம், கல்வி, வங்கி, காப்புறுதி மற்றும் தவணைக் குத்தகை போன்ற பல்வேறுபட்ட துறைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கு விசேட சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்கட்டமாக 50,000 படைவீரர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்படும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 5,000 படைவீரர்களுக்கும் அவர்களில் தங்கிவாழ்வோருக்கும் இந்த சிறப்புரிமை அட்டையை வழங்கும் விழாவானது 2016‑01‑25 ஆம் திகதியன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழும் மாண்புமிகு பிரதம அமைச்சரினதும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினதும் பங்குபற்றுதலுடனும் அலரி மாளிகையில் நடாத்தப்படுமென்பது பற்றி பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.