• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
- 2016 சனவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் அதிமேதகைய நவாஸ் செரீப் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பின்வரும் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கும் மற்றும் பாக்கிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்தின் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி துறைசார்ந்த ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை.

* பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புள்ளிவிபர மற்றும் தொகைமதிப்பு தரவுகளை பகிர்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கையின் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் பாகிஸ்தான் விஞ்ஞான தொழினுட்ப அமைச்சுக்கும் இடையில் விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்குகை ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்துக்கும் பாகிஸ்தான் விஞ்ஞான மன்றத்துக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்பவியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* பாகிஸ்தான் வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சுகாதாரதுறை ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கலாசாரதுறை ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கையின் மாணிக்கல், ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் வடிவமைப்பு, நிருமாண நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் முதலியவற்றுக்குரியதாக நிதி புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒத்துழைப்புத் தொடர்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதலைத் தடுத்தல் மற்றும் எதிர்ப்பு தொடர்பிலான இருதரப்பு ஒத்துழைப்புப் பற்றி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.