• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணக்கப்பாட்டுக்கு கட்டாயமாக தொடர்புபடுத்தப்பட வேண்டிய பிணக்குகள் தொடர்பிலான நாணய மதிப்பு எல்லையினை அதிகரித்தல்
- 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்தின் 7(அ) ஆம் பிரிவின் மூலம் இணக்கப்பாட்டுக்கான மதிப்பு 25,000/- ரூபாவை விஞ்சாத அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அல்லது கடன், நட்டம் அல்லது கோரிக்கைகள் சம்பந்தமான பிணக்குகள் கட்டாயமாக இணக்கச்சபைக்கு தொடர்புபடுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மத்தியஸ்த சபை திருத்த சட்டத்தின் மூலம் இந்த கட்டாய எல்லை 250,000/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டதோடு, இந்த நாணய மதிப்பு எல்லை தற்போதைய தேவைக்கு அமைவாக 500,000/- ரூபாவரை அதிகரிக்கும் பொருட்டு மத்தியஸ்த சபை சட்டத்தை திருத்துவதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.