• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1964 ஆம் ஆண்டின் (அத்தியாயம் 122) தொழிலுக்கமர்த்தல் கொள்கை தொடர்பிலான சருவதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயத்தை ஏற்றுக் கொள்ளல்
- "தொழிலுக்கமர்த்தல் கொள்கை தொடர்பிலான C 122 சமவாயம்" (Convention C 122 on Employment Policy) மற்றும் இத்துடன் இணைந்த "R 122 சிபாரிசு" (Recommendation R 122) சருவதேச தொழிலாளர் அமைப்பினால் 1964 ஆம் ஆண்டில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது. C 122 சமவாயத்தின் மூலம் அடிப்படையில் ஊழியர் மற்றும் பணிகொள்வோருடன் உசாவுதலைச் செய்து முழுமையான, பயன்மிக்க மற்றும் சுயாதீனமாக தெரிவுசெய்யப்படும் தொழில்கள் மேம்படுத்தும் பொருட்டு செயற்பாட்டுத் திட்டமொன்றைப் பிரகடனப்படுத்தும் அத்துடன் இணங்கியொழுகும் பொறுப்பு இந்த சமவாயத்திற்கு செயல்வலுவாக்கம் அளித்த நாடுகளுக்கு உள்ளது. 2013 ஆம் ஆண்டிலே நடைமுறைப்படுத்தப்பட்ட "இலங்கையில் தேசிய மனிதவள மற்றும் தொழிலுக்கமர்த்தல் கொள்கை" (The National Human Resources and Employment Policy of Sri Lanka) முழுமையான, பயன்மிக்க மற்றும் சுயாதீனமாக தெரிவுசெய்யப்படும் தொழில் சார்பிலான அடிப்படை கட்டமைப்பை ஏற்பாடு செய்கின்றது. C 122 சமவாயத்தை செயல்வலுவாக்கம் செய்வதன் மூலம் நாட்டில் தொழில் தரங்களில் செயற்பாடும் அதேபோன்று சமூக கொள்கையும் மேலும் பலப்படுத்தப்படுவதோடு, ஆட்சி (governance) சம்பந்தமாகவும் இது முக்கியமானதாகும். இதற்கமைவாக சருவதேச தொழில் அமைப்பின் தொழிலுக்கமர்த்தல் கொள்கை பற்றிய C 122 (1964) சமவாயத்துக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது