• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் ரீதியில் உணர்திறன் வாய்ந்த காணிப் பரப்புகளில் உயிர் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பினை மேம்படுத்தும் மற்றும் சூழல் முறைமைகளின் சேவைகளைப் பேணும் கருத்திட்டம்
- "இலங்கையில் சுற்றாடல் ரீதியில் உணர்திறன் வாய்ந்த காணிப் பரப்புகளில் உயிர் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பினை மேம்படுத்தும் மற்றும் சூழல் முறைமைகளின் சேவைகளைப் பேணும் கருத்திட்டம்", ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (United Nations Development Programme - UNDP) மற்றும் உலக சுற்றாடல் வசதிகள் (Global Environment Facility - GEF) என்பவற்றின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் அடிப்படை நோக்கமாவது சுற்றாடல் ரீதியில் உயர் முக்கியத்துவம் கொண்ட பிரதேசங்களில் செய்யப்படும் அபிவிருத்தி நோக்கங்கள் உயிர் பல்வகைத் தன்மை, சுற்றாடல் முறைமைகளின் சேவைகளைப் பாதுகாக்கும் விதத்தில் செயற்படுத்துகின்றமையை உறுதிப்படுத்தும் வழிமுறையொன்றாக சுற்றாடல் உணர்திறன் வாய்ந்த பிரதேசங்களை வெளிப்படுத்துதலும் அத்தகைய வழிமுறைகளைத் தாபித்து நடாத்திச் செல்வதற்கான முன்னோடி பிரதேசங்கள் இரண்டினை கண்டறிவதாகும். இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டம் 2.62 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நன்கொடையினைப் பயன்படுத்தி ஐந்து (5) வருட காலத்திற்குள் பின்வரும் முன்னோடிப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது

* கலாவெவ சுற்றாடல் உணர்திறன் பிரதேசம் - அநுராதபுரம் மாவட்டத்திற்குரிய இப்போலோகம, பலாகல, கெக்கிராவ, கல்நாவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.

* வில்பத்து சுற்றாடல் உணர்திறன் பிரதேசம் - புத்தளம் மாவட்டத்திற்குரிய வனாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவு.