• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச சேவை அலுவலர்களுக்கான வௌிநாட்டுப் பிரயாணத்திற்கான அனுமதியினை வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை
- தாபனவிதிக் கோவையின் XV ஆம் அத்தியாயத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அரசாங்க சேவை, மாகாண அரசாங்க சேவை மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தரங்களின் உத்தியோகத்தர்கள் ஏதேனும் உத்தியோகபூர்வ நோக்கத்திற்காக வெளிநாடு செல்வார்களாயின், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பிரதம அமைச்சரின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்தல் வேண்டும். இதற்குரியதாக பிரதம அமைச்சரின் அலுவலகத்திற்கு நாளாந்தம் இது சம்பந்தமான விண்ணப்பங்கள் பெருமளவில் கிடைப்பதோடு, பிரதம அமைச்சரின் அலுவலகத்திற்கு தற்போது கையளிக்கப்பட்டுள்ள பரந்துபட்ட பணிகளை கவனத்திற் கொள்ளும் போது குறித்த உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு லீவுகள் அவருடைய அங்கீகாரத்தின் பொருட்டு தொடர்புபடுத்துவது நடைமுறை சாத்தியமற்றதென அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த உத்தியோத்தர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டிய அங்கீகாரம் தாமதமின்றியும் இலகுவாகவும் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் விதத்திலான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தி தாபனவிதிக் கோவைக்கு பொருத்தமான திருத்தங்களை செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.