• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை மின்வலு அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சி திட்டம்
- பசுமை மின்வலு அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சிதிட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினாலும் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினாலும் 53.91 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 5 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப் படுவதோடு, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அதன்கீழ் செயற்படுத்தப்படும் பிரதான கருத்திட்டமொன்றாகும். இந்த கருத்திட்டத்தின் கீழ் அனுப்பீட்டு கம்பிகளை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது