• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரையிலான (கி.மீ 0+500 - கி.மீ 4+540) பகுதியின் நிருமாணிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் பற்றி ஆராய்தலும் METALLURGICAL CORPORATION OF CHINA (MCC) கம்பனியிடமிருந்து பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அங்கீகாரம் கோருதலும்
- மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரையிலான பகுதியின் நிருமாணிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கும் METALLURGICAL CORPORATION OF CHINA (MCC) கம்பனியிடமிருந்து தொழினுட்ப மற்றும் நிதி பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது