• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வினைத்திறன் மிக்கதும் வசதியுடன் கூடியதுமான போக்குவரத்து சேவையொன்றை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும் இணைந்த பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை மேம்படுத்துவதற்குமாக இந்திய கடன் உதவி வழிமுறையை பயன்படுத்துதல்
- முக்கியமான பொது போக்குவரத்து சேவையொன்றான புகையிரத சேவையை நடாத்திச் செல்வதற்குத் தேவையான புகையிரத எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் பழையனவாக உள்ளதன் காரணத்தினால் வசதியுடன் கூடிய, பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சேவையொன்றை பயணிகளுக்கு வழங்குவதற்கு முடியாமற் போயுள்ளது. தற்போதுள்ள புகையிரத எஞ்சின்களின் 50 சதவீத்திற்கு மேலானவை முப்பது (30) வருடங்களுக்கு கூடுதலான காலத்தைக் கொண்டதோடு, 550 பயணிகள் செல்லும் பெட்டிகள் இருபத்தைந்து (25) வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்தவைகளாகும். இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வடக்கு புகையிரதபாதை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியங்களிலிருந்து மேலும் மீதியாயுள்ள 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி புகையிரத எஞ்சின்களையும் பயணிகள் பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கும் புகையிரத சைகை முறைமைகளை நவீனமயப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது