• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமாகாணத்தில் தேர்தல் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் தேர்தலில் போட்டியிட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சலுகையளித்தல்
- வடமாகாணத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரையோரப்பற்று பிரதேசசபை தேர்தலுக்காக 2011 சனவரி மாதம் வேட்புமனு பொறுப்பேற்கப்பட்ட போதிலும், இயைபுள்ள பிரதேசங்களில் கன்னிவெடி அப்புறப்படுத்தல் முடிவடையாமல் இருந்தமையினாலும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடைசெய் கட்டளையினாலும் இந்த தேர்தலை பிற்போட நேரிட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு கையளித்துள்ள அபேட்சகர்களில் அரசாங்க உத்தியோகத்தர்களும் இருக்கின்றதோடு, தேர்தல் நடாத்தப்படாமை காரணமாக அவர்களுக்கு அவர்களுடைய சேவை நிலையங்களில் சேவைக்காக சமூகமளிக்க முடியாமல் சம்பளமற்ற லீவின் மீது இருக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்த உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டிற்கு மீறிய காரணத்தினால் எழுந்துள்ளமையினால் அவர்கள் இறுதியாக சேவையாற்றிய சேவை நிலையங்களில் சேவைக்காக சமூகமளிப்பதற்கு இடமளிப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது