• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இடைக்கால போகத்தில் பாசிப்பயறு உற்பத்திக்கு போட்டி விலையினை உருவாக்குவதற்காக அரசாங்கத்தின் தலையீடு
- எமது வருடாந்த உள்நாட்டு பாசிப்பயறு தேவையானது சுமார் 26,000 மெற்றிக் தொன் ஆவதோடு, பாசிப்பயறு இறக்குமதிக்கு வருடாந்தம் 851 மில்லியன் ரூபா செலவாகின்றது. இந்த இறக்குமதி செலவினை குறைக்கும் பொருட்டு உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டின் இடைப்போகத்தில் பாசிப்பயறு செய்கையானது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அநுராதபுரம், மன்னார், குருநாகல், மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளினால் சுமார் 3,200 மெற்றிக் தொன் பாசிப்பயறு உற்பத்தி செய்யப்பட்டதோடு, தற்போது சந்தையில் பாசிப்பயறு கிலோ ஒன்று 120/- ரூபாவுக்கும் 140/- ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை உற்பத்தி செலவுடன் ஒப்பிடும் போது போதுமானதாக இல்லை. ஆதலால், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பாசிப்பயறை 180/- ரூபா வீதம் கொள்வனவு செய்யும் பொருட்டு 50 மில்லியன் ரூபாவைக் கொண்ட உச்சத்தின் கீழ் தேவையான நிதி ஏற்பாடுகளை முற்பணமாக கமநல நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உடாக இயைபுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது