• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போது பயன்படுத்தப்படும் ஆள் அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்குரியதான ஒழுங்கு விதிகளைத் திருத்துதல்
- ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் ஆள் அடையாள அட்டையைப் பயன்படுத்துகையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் கஷ்டங்களும் எழுகின்றமை தெரியவந்துள்ளது. ஆதலால், இது சம்பந்தமாக சருவதேச தரங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஆள் ஒருவரின் ஆயளவைத் தகவல்களை உள்ளடக்கக்கூடிய விதத்தில் ஆட்கள் சம்பந்தமான தேசிய தரவுமுறைமையொன்றைத் தாபித்து பாதுகாப்பான மின்னணு தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை சருவதேச நியமங்களுக்கேற்ப வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த செயற்பாட்டிற்குரியதான ஒழுங்குவிதிகளை ஆக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது