• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைகழகத்தின் சிரேட்ட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு ஓய்வூதிய நலன்களை வழங்குதல்
- பேராதனை பல்கலைகழகத்தின் சிரேட்ட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் சேவை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 1982‑11‑01 ஆம் திகதியிலிருந்து அவர் 65 வயதினை அடையும் திகதிவரை குறித்த பதவியில் அவர் சேவையாற்றியதாக கருதி அவருக்கு ஓய்வூதிய நலன்களை வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.