• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க திவிநெகும சட்டத்திற்கு சமுர்த்தி என்னும் பெயரை இடுதல்
- இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, இலங்கை மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மலைநாட்டு விவசாயிகள் புனர்வாழ்வளிப்பு திணைக்களம், சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களம் போன்ற நிறுவனங்களை இணைத்து 2013 ஆம் ஆண்டில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களமானது தாபிக்கப்பட்டது. ஆயினும் வறுமையை ஒழிக்கும் பிரதான நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டமானது மக்களிடையில் பிரபல்யமாகவும் அங்கீகாரத்திற்கு உட்பட்டும் உள்ளது "சமுர்த்தி" என்னும் பெயரிலாகும். அதேபோன்று இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய குழுக்கள், சங்கங்கள், பொதுச் சங்கங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் கிராம மட்டத்திலான உத்தியோகத்தர்கள் "திவிநெகும" என்னும் பெயருக்குப் பதிலாக "சமுர்த்தி" என்னும் பெயரை பயன்படுத்துமாறு செய்யப்படும் கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு "திவிநெகும" என்பதற்குப் பதிலாக "சமுர்த்தி" என்னும் பெயரை பதிலீடு செய்யும் பொருட்டு 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்துவதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது