• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டு சார்பில் தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கான மீட்டளிப்புக் காப்புறுதிக் காப்பீடு (மீட்டளிப்புக் காப்புறுதி)
- இலங்கையிலுள்ள சகல காப்புறுதிக் கம்பனிகளும் அதன் மீட்டளிப்புத் தேவையிலிருந்து 30 சதவீதம் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது கட்டாயமானதாகும். அவ்வாறு வழங்கப்படும் மீட்டளிப்புக் காப்புறுதி மூலம் எழக்கூடிய ஏதேனும் வழமைக்குமாறான இழப்பீடு காரணமாக தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு பொறுப்பேற்பதற்கு ஏற்படுகின்ற ஆபத்தினை குறைத்துக் கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு மீட்டளிப்பு காப்புறுதி கம்பனிகளின் மூலம் மீட்டளிப்பு காப்புறுதி காப்பீடொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.