• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் உத்தேச மருத்துவ காவறைத்தொகுதியின் நிருமாணிப்பு
- வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரதான வைத்தியசாலையொன்றான சிலாபம் பொது வைத்தியசாலையானது சிலாபம் பொதுமக்களுக்கும் அதேபோன்று அருகாமையிலுள்ள மக்களுக்கும் சிகிச்சை சேவைகளை வழங்குகின்றது. இந்த வைத்தியசாலையின் மூலம் நன்மைபெறும் மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தரம்மிக்க சேவையொன்றை வழங்கும் பொருட்டு 696 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவின் கீழ் புதிய மருத்துவ காவறைத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.