• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேசிய குருதியேற்றல் சேவையை நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தி நெதர்லாந்து உதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல்
- இலங்கையில் தேசிய குருதியேற்றல் சேவையானது பதினெட்டு (18) கொத்தனி நிலையங்களிலும் இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளிலும் உள்ள 93 குருதி வங்கிககளைக் கொண்டுள்ளதோடு, அதன் சேவைகளை சருவதேச தரத்திற்கு ஏற்றவிதத்தில் விருத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்று தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தின் பணிகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, ஆரம்ப கருத்திட்ட திட்டத்தில் உள்வாங்கப்படாத பின்வரும் வசதிகளை இந்த கருத்திட்டத்தின் கீழ் தாபிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* குருதி மூலம் தொற்றும் எய்ட்ஸ் (HIV) மற்றும் செங்கமாலை போன்ற நோய்கள் குருதி மூலம் தொற்றுவதை தடுப்பதற்குரிய அணு அமில (NAT) பரிசோதனைக்கான விசேட இரசாயனகூடமொன்றை நிருமாணித்தல்.

* சிறுநீரக மற்றும் எலும்பு மச்சை மாற்று சிகிச்சைக்குத் தேவையான HLA பரிசோதனை மேற்கொள்வதற்கான அதிதொழினுட்ப உபகரணங்களைக் கொண்ட விசேட இரசாயனகூடமொன்றை நிருமாணித்தல்.

* குருதி புற்றுநோய் உட்பட ஏனைய குருதிசார்ந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்குத் தேவையான ஆரம்ப குருதி கலங்களை தயாரித்தல் மற்றும் மாற்று சிகிச்சை என்பவற்றுக்கான அதிதொழினுட்பத்தை (Stem Cell Transplantation) பயன்படுத்துவதற்கான விசேட இரசாயனகூடமொன்றை நிருமாணித்தல்.

* Cord Blood Bank ஒன்றை தாபித்தல்.