• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்காக வேரஹர மனை யிடத்தில் ஆவணக் கோப்பு களஞ்சிய சாலையொன்றை நிருமாணித்தல்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் இதுவரை 60 இலட்சம் வாகனங்களுக்கு மேலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்குரிய மூலக்கோவைகள் (Original Files) மற்றும் வாகனங்களின் உரிமை மாற்றத்தின் போது சேரும் உரிமை மாற்றக்கோவை (Transfer Files) போன்றவற்றை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்கும் பொருட்டு நாராஹேன்பிட்ட பிரதான அலுவலக மனையிடத்தில் இடவசதி போதுமானதாக இல்லாமையினால் 98 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் புதிய ஆவண கோப்பு களஞ்சியசாலையொன்றை வேரஹர மனையிடத்தில் நிருமாணிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது