• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனன்குடா புகையிரத நிலையத்திலிருந்து மாகோ புகையிரத நிலையம் வரை ஹோல்சிம் (லங்கா) கம்பனியின் நிலக்கரி கொள்கலன்களை விசேட புகையிரதம் மூலம் கொண்டு செல்வதற்காக புகையிரத திணைக்களம் ஹோல்சிம் (லங்கா) கம்பனியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- பொதுவாக உலகின் பெரும்பாலான நாடுகளில் புகையிரதம், பொருட்களை கொண்டு செல்வதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் தற்போது இலங்கையில் புகையித திணைக்களம் பிரயாணிகள் போக்குவரத்தின் மூலம் பெறும் வருமானத்துடன் ஒப்பிடும்போது பொருள் கொண்டுசெல்லல் வருமானம் குறைந்த மட்டத்தில் நிலவுகின்றது. இதற்கான வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் திணைக்களத்தினால் பாரம்பரியமற்ற பொருள் கொண்டுசெல்லல் வழியொன்றின்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஹோல்சிம் (லங்கா) கம்பனியினால் திருகோணமலை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யும் நிலக்கரி திருகோணமலை சீனன்குடா புகையிரத நிலையத்திலிருந்து மாகோ புகையிரத நிலையம் வரை கையாள்கை செலவின் அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுவதற்கு உட்பட்டு கொண்டு செல்வதற்கான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .