• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை ஆபத்துத் தொடர்பான பொது மன்றத்தில் (Climate Vulnerable Forum) இலங்கை அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்
- இலங்கை அயன மண்ட வலயத்தில் அமைந்துள்ள தீவொன்றாகவும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்றாகவும் அது காலநிலை மாற்றங்களின் பிரதிகூலமான பாதிப்புகளுக்கு கடுமையாக முகம்கொடுக்கும் நாடொன்றாகும். காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பிரதிகூலமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு தேசிய மட்டத்தில் செயலாற்றுவது மாத்திரம் போதுமானதாக இல்லாததோடு, இதற்காக உலக நாடுகளுக்கிடையில் இருதரப்பு, பல்புடை அதேபோன்று வலய உடன்படிக்கைள் அல்லது நாடுகள் குழுக்களாக இணைந்து செயற்படுகின்றன. இதற்கமைவாக சமமான பாதிப்புகளுக்கு ஆளாகும் அத்துடன் ஆளாகியுள்ள அரசாங்கங்களினால் "காலநிலை ஆபத்துத் தொடர்பான பொது மன்றம்" தாபித்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்த மன்றத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.