• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை பணியாளர்களுக்கு "ஆகக்குறைந்த தேசிய சம்பளம்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்கான சட்டம்
- தேசிய தொழில் மதியுரைச் சபையின் உறுப்பினர்களினதும் அதேபோன்று பல்வேறுபட்ட தொழிற்சங்களினதும் கோரிக்கையின் பேரில் புறம்பான சட்டமொன்றின் மூலம் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த தேசிய சம்பளமொன்றை விதித்துரைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நிலவும் ஆகக்குறைந்த சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆள் ஒருவரின் மாதாந்த ஆகக்குறைந்த வறுமைக்கோடான 4,000/- ரூபா என்னும் எல்லையை கருத்திற்கொண்டாகும். ஆயினும், தற்போதைய தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஆகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை 10,000/- ரூபாவாக அமையும் விதத்தில் சட்டங்களை வரையும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.