• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ADS-B முறைமையை இலங்கையில் வழங்கி, தாபித்து, செயற்படுத்துதல்
- ADS-B முறைமையானது தற்போதைய உலகின் விமானப் போக்குவரத்தின் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் முறைமை யொன்றாகும்.சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினால் ஆசிய பசுபிக் வலயத்தின் வான்வழி தெரிமுறையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ADS-B பாவனையை சிபாரிசு செய்துள்ளதோடு இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகள் ஏற்கனவே ADS-B முறைமையை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக இலங்கையில் ADS-B முறைமையை வழங்கி தாபிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படும் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.