• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
- வட மாகாணத்திலிருந்து வௌியேறுமாறு செய்யப்பட்ட பலவந்தம் காரணமாக சொந்தக் காணிகளிலிருந்தும் சொத்துக்களைக் கைவிட்டும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியுள்ளவர்களும் தங்கியவர்களுமான இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் ஆட்களுக்கும் வாக்குரிமையை வழங்குவதற்காக 2013 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க வாக்காளர்களைப் பதிவுசெய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் ஆக்கப்பட்டதோடு, இது 2013‑06‑20 ஆம் திகதி தொடக்கம் இரண்டு (02) வருட காலப்பகுதிக்கு வலுவிலிருந்தது. வடமாகாணத்தில் குடியிருந்து இடம்பெயர்ந்தவர்களும் தற்போது புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் குடியேறியுள்ளவர்களும் இருப்பினும், மீண்டும் வடமாகாணத்தில் குடியேறும் எதிர்பார்ப்புடன் உள்ள பிரசைகளுக்கு இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை மேலும் இரண்டு (02) வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு 2013 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை உள்ளடக்கிப் புதிய சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.