• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரும்பு மற்றும் இரும்பல்லாத உலோகக் கழிவுகள் மற்றும் உலோக வார்ப்பு கட்டிகள் ஏற்றுமதியின் போது சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ளல்
- இரும்பு மற்றும் இரும்பல்லாத உலோகங்களை மூலப்பொருளாகப் பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை நடாத்திச் செல்லும் உள்ளூர் கைத்தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் மூலப்பொருள் பற்றாக்குறை தொடர்பிலான பிரச்சினை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதற்குத் தீர்வொன்றாக அவர்களுக்கு அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து அகற்றப்படும் இரும்பு மற்றும் இரும்பல்லாத உலோக வகைகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான வழிமுறையொன்றை சிபாரிசு செய்யும் பொருட்டு இந்த விடயம் சம்பந்தமாக ஊக்கமுள்ள அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.