• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ கட்டளைச்சட்டத்தைத் திருத்துதல் (நிபுணத்துவ மருத்துவர்களின் அட்டவணை)
- மருத்துவ கட்டளைச்சட்டத்தில் நிபுணத்துவ மருத்துவர்களை பதிவுசெய்யும் பொருட்டு புறம்பான அட்டவணையொன்றை பேணுவது சம்பந்தமான ஏற்பாடுகள் இல்லாமையினால் குறித்த மருத்துவரின் ஆரம்ப MBBS தகைமை பதிவு செய்யப்படும் அதே அட்டவணையில் குறித்த பக்கத்தில் மேலதிக தகைமையொன்றாக நிபுணத்துவ தகைமையானது பதிவு செய்யப்படுகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் வெவ்வேறு நிபுணத்துவம் சம்பந்தமாக வெவ்வேறாக பதிவுசெய்யும் அட்டவணை பேணப்பட்டு வருகின்றதோடு, அது பொது மக்களுக்கு மிக பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தேவைப்படும் முன்நிபந்தனையொன்றாக கருதப்படுகின்றது. இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நோயாளர் சிகிச்சை சேவைகளின் தரத்தினை பேணும் நோக்குடன் நிபுணத்துவ மருத்துவர்களுக்கான அட்டவணையொன்றை (Specialist Register) தயாரிப்பதற்காக மருத்துவ கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.