• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்த முகாமைத்துவத்துக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பினை மீளமைத்தலும் பலப்படுத்துதலும்
- அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (Disaster Management Center) மூலம் அனர்த்தங்களைக் குறைத்தல், முன்னேற்பாடு, அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுத்தல், அனர்த்த மற்றும் அதுசார்ந்த தகவல்களைத் திரட்டுதல் போன்ற பணிகள் செய்யப்படுவதோடு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் (National Disaster Relief Services Center) அனர்த்தங்களின் பின்னர் நிவாரணங்களை வழங்கும் பணிகள், அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் பணிகள். அதேபோன்று அனர்த்தத்திற்குள்ளானவர்களின் வீடுகளை நிருமாணிக்கும் பணிகள் முதலியன செய்யப்படுகின்றன. இந்த இரண்டு (02) நிறுவனங்களின் மூலம் வெவ்வேறாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இவ்விரு நிறுவனங்களும் செய்வது அனர்த்த சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு நேரடியாக தலையிட்டு செயலாற்றுவதாகும். அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளுக்குத் தேவையான வினைத்திறன் மிக்க பொறிமுறையொன்றை உருவாக்கும் பொருட்டு மேற்குறிப்பிட்ட இரண்டு (02) நிறுவனங்களையும் ஒன்றிணத்து பலமிக்க நிறுவனமொன்றாக தாபிக்கும்பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.