• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்காக இரண்டு கம்பனிகளை தெரிவு செய்வதற்கான கேள்வி செயற்பாட்டின் மீது நிகழ்ந்துள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சட்டத்தன்மையை பரிசீலனை செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல்
- 2011 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு (02) தனியார் கம்பனிகளை தெரிவுசெய்த நடவடிக்கை முறையையும் இந்த கம்பனிகளினால் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் போது வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகையைப் பயன்படுத்தி செய்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ள முறைகேடுகள் பற்றி பரிசீலனை செய்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் சட்டத்தன்மை பற்றி பரிசீலனை செய்வதற்கும் பொது திறைசேரி, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு, இலங்கை சுங்கம் போன்ற நிறுவனங்களின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.