• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுண்பாக நிதி சட்டமூலம்
- இலங்கையில் நுண்பாக நிதிப்பிரிவு தற்போது கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளது. இதன் பெறுபேறாக கூட்டுறவுச்சங்கங்கள், வணிக வங்கிகள், அபிவிருத்தி வங்கிகள், அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்கள் சிறு அளவிலான கடன்வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. தற்போது பல்வேறுபட்ட ஒழுங்குறுத்தல் தேவைகள் மற்றும் தரங்களுக்கு இணங்க அரசாங்க நிறுவனங்களின் மூலம் இலங்கையில் நுண்பாக நிதி நிறுவனங்கள் ஒழுங்குறுத்துகையையும் மேற்பார்வையையும் செய்கின்றன. இந்த துறையில் நிலவும் உட்சிக்கல் நிலையின் மீது சிறந்த முறையில் ஒழுங்குறுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நுண்பாக நிதித்துறையில் எதிர்பார்க்கப்படும் வினைத்திறன் குறைவடைவதற்கும் இந்த துறையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் சிறு அளவிலான கடன்வசதிகளை வழங்கும் நிறுவனங்களிலிருந்து நலன்களைப்பெறும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் இந்த நிலைமை காரணமாய் அமையும். ஆதலால், இலங்கையில் நுண்பாக நிதி நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட நுண்பாக நிதி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.