• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மானிட போசாக்கு மற்றும் நலன்கள் மேம்பாட்டிற்கான உயிர்பன்முகத்தன்மை பாதுகாப்பினையும் நிலையான பயன்பாட்டினையும் தழுவும் கருத்திட்டம்
- மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம், உலக உணவு, கமத்தொழில் அமைப்பு மற்றும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் என்பனவற்றின் ஊடாக இலங்கைக்கு சுமார் 116 மில்லியன் ரூபாவைக் கொண்ட கொடை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் விசேடமான உயிர்பன்முகத் தன்மையை நிலையாக பயன்படுத்துதல், உணவுப் பாதுகாப்பினை உருவாக்கி கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துதல், இதன்மூலம் உயிர்பன்முகத்தன்மையின் பாதுகாப்புக்கு மக்களை ஈடுபடுத்துதல் என்பன இந்தக் கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதற்கமைவாக, முன்னோடிக் கருத்திட்டமாக மூன்று (03) பிரதேசங்களில் அதாவது இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேச செயலகப் பிரிவிலும் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவிலும் குருநாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவிலும் இந்த கருத்திட்டத்தை 2017 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.