• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
- உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் இந்த நிறுவனங்களுக்கான தேர்தலின்போது தொகுதிமுறையை (Ward System) அறிமுகப்படுத்துவதற்கும் தேர்தல் முறையை மிக வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.