• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிறைவேற்று சனாதிபதி முறையை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளித்தல் உட்பட மிக சனநாயக ரீதியிலான தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டில் அரசியலமைப்புக்கான திருத்தம்
- 2015 சனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிட்ட தாம் முன்வைத்த "மைத்திரி நிருவாகம் - நிலையான நாடு" என்னும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின்போது நிறைவேற்று சனாதிபதி பதவியின் அதிகாரங்களை முன்னர் எதிர்பார்க்கப்பட்டவாறு பெருமளவில் குறைப்பதற்கு இயலாமற்போனது அத்தகைய திருத்தமொன்றைச் செய்வதற்கு சர்வசன வாக்கெடுப்பொன்று தேவையென உயர்நீதிமன்றத்தின் கருத்தாக இருந்தமையினாலாகும். அதேபோன்று தேர்தல் முறையை திருத்துவதற்காக நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது பரந்துபட்ட உடன்பாடுகளுக்கு வருவதற்கு இயலாமற் போனமையினாலும் உத்தேச திருத்தங்கள் செய்யமுடியாமற் போயின. ஆதலால், இது தொடர்பில் ஊக்கமுள்ள ஏனைய அரசியல் கட்சிகளினதும் மக்கள் அமைப்புகளினதும் பிரதிநிதித்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்று சனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கும் தேர்தல் முறையைத் திருத்துவதற்கும் தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தப் பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறையையும் செய்யப்பட வேண்டிய அரசியலமைப்பு மாற்றங்கள் சம்பந்தமாகவும் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் தலைமை தாங்கும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும்கூட அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.