• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-11-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளுக்கும் மன்னார் ஆற்றுப்படுகையின் விசேட நிலநடுக்க தரவுகளின் மீள் செய்முறைப்படுத்தல் மற்றும் உருவாக்கம் உருப்படிவமும் சார்பிலான கருத்திட்டம்
- சகல உள்நாட்டு சக்தி உற்பத்தி வழிகளை சிறந்த மட்டத்தில் பாவிப்பதன் மூலம் இலங்கை வலுசக்தியில் தன்னிறைவைக் காண்பது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்காக இலங்கையில் பெற்றோலிய மற்றும் இயற்கை வாயு அகழ்வுபணிகளுக்கு மிக முக்கிய இடம் உரியதாவதோடு, 2011 ஆம் ஆண்டில் மன்னார் ஆற்றுப்படுகைக்கு அருகாமையில் இரண்டு இயற்கை வாயு ஒதுக்கங்கள் கண்டறிவதற்கு இயலுமானமை ஒரு மைற்கல்லாகும். 2001-2005 காலப்பகுதிக்குள் மன்னார் ஆற்றுப்படுகைக்கு அண்மையில் அமைந்துள்ளதாக கருதப்படும் பெற்றோலிய படிவுகளும் இயற்கை வாயு படிவுகளும் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய விசேட நிலநடுக்க தரவுகள் திரட்டப்பட்டிருநத போதிலும் இந்த தரவுகள் பத்து வருடங்களுக்கு மேலாக பழமையானவையென்பதால் அவற்றை மீள் செய்முறைப்படுத்தல் உட்பட மேம்படுத்தும் தேவையுள்ளது. இதற்கமைவாக, ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள விசேட நிலநடுக்க தரவுகளை நவீன தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்தி மீள செய்முறைப்படுத்துவதற்கும் பதிலீடு செய்வதற்குமான கருத்திட்டத்தையும் மன்னார் ஆற்றுப்படுகைக்கு அண்மையில் ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளின் மூலம் தரவுகளை திரட்டும் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினதும் கருத்திட்ட குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .